இலங்கையின் பிரதமர் பதவியை மகிந்தா ராஜபக்சே ராஜினாமா செய்யப்போவதாகவும் புதிதாக ஆட்சி அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
எனினும், பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை என்று பிரதமர் மகிந்தா ராஜபக்சே கூறிவந்தார். இதனிடையே, போராட்டத்தின் தீவிரத்தை குறைப்பதற்காக இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஆளும் அரசுக்கு எதிரான மக்களின் கோபம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், பிரதமர் மகிந்தா ராஜபக்சே தனது பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் பதவியை ஏற்கும்படி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பொது இடத்தில் பெண்கள் முழு புர்கா அணிவது கட்டாயம் - தாலிபான் உத்தரவு
இது தொடர்பாக சமாகி ஜன பலவேகயா கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவை அதிபர் கோத்தபய தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். எனினு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்று கூடி இது தொடர்பான ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், மீண்டும் பொதுத்தேர்தல் நடத்த வேண்டுமென்றால் அது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட மசோதாவை நிறைவேற்ற தனக்கு அனுப்பலாம் என்றும் சஜித்திடம் கோத்தபய பேசியதாக கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.