இலங்கை அதிபர் தேர்தல் - ஐ.தே.க சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் போட்டி

சஜித் பிரேமதாசா

  • News18
  • Last Updated :
  • Share this:
இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாசா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோத்தபய ராஜபக்சே, திசநாயகே, சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.

இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய அதிபரை தேர்வுசெய்வதற்கான தேர்தல், நவம்பர் 16-ம் தேதி நடைபெறுகிறது.

இலங்கை சுதந்திரா கட்சி சார்பில் சிறிசேனா மீண்டும் போட்டியிடுகிறார். ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் ராஜபக்சே-வின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். இதேபோல, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சார்பில் அனுரா குமார திசநாயகே அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே-வின் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் வேட்பாளரை தேர்வுசெய்வதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசா அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் ரனசிங்கே பிரேமதாசா-வின் மகனும், கட்சியின் துணைத் தலைவருமான சஜித்-தின் பெயரை ரணில் விக்ரமசிங்கே முன்மொழிந்தார். இதனை மற்ற நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டதை அடுத்து, வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

Published by:Sankar
First published: