இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா மீண்டும் போட்டி!

மைத்ரிபால சிறிசேனா (AP/PTI)

  • News18
  • Last Updated :
  • Share this:
இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா மீண்டும் போட்டியிட இருப்பதாக இலங்கை சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

இலங்கையில் நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கப்படும் எனவும் தேர்தல் ஆணையக்குழு அறிவித்திருந்தது.

இலங்கை பொதுஜன முன்னணி கட்சியின் சார்பாக மகிந்த ராஜபக்சேயின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா மீண்டும் போட்டியிட இருப்பதாக இலங்கை சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. சிறிசேனா மீது ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் இல்லை என்பதால், அவரை மீண்டும் களமிறக்குவதாகவும் அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.

Published by:Sankar
First published: