நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம் - ராஜபக்சே அரசு கவிழ்ந்தது

Srilanka Political Crisis | இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், பாராளுமன்றத்தில் ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம் - ராஜபக்சே அரசு கவிழ்ந்தது
மஹிந்த ராஜபக்சே
  • News18
  • Last Updated: November 14, 2018, 12:47 PM IST
  • Share this:
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பொதுத்தேர்தல் அறிவிப்புக்கும் தடை விதிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று கூடும் என்று சபாநாயகர் கரு. ஜெயசூரியா அறிவித்திருந்த நிலையில், ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் ஜே.வி.பி கட்சி சார்பில் அளிக்கப்பட்டது.


இலங்கை நாடாளுமன்றம், Srilankan Parliament,
இலங்கை நாடாளுமன்றம்


நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில் மகிந்த ராஜபக்சே, ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அவை தொடங்கியது முதலே உறுப்பினர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதால் ராஜபக்சே ஆவேசமாக அவையிலிருந்து வெளியேறினார்.
ரணில் விக்கரமசிங்கே | Ranil Wickramasinghe
ரணில் விக்கரமசிங்கே


கூச்சல், குழப்பத்துக்கு இடையே நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. வாக்கெடுப்பில் 122 எம்.பி.க்கள் ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களித்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பின் முடிவில், ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று சபாநாயகர் கரு. ஜெயசூரியா அறிவித்தார்.

Also See..

First published: November 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்