ஹோம் /நியூஸ் /உலகம் /

இலங்கை அரசுக்கு எதிராக வரிசைகட்டும் கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை அரசுக்கு எதிராக வரிசைகட்டும் கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை போராட்டம்

இலங்கை போராட்டம்

இலங்கையில் இன்று நிகழ்ந்த வன்முறை தொடர்பாக ஆளும் அரசுக்கு எதிராக முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இலங்கை பிரதமர் பதவியை மகிந்தா ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயவர்த்தனே, ஒருவர் போய்விட்டார்,  இன்னும் ஒருவர் உள்ளார் என அதிபர் கோத்தபய ராஜபக்சேவை குறிப்பிட்டுள்ளார்.

  இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

  தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில்,  130க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக மகிந்தா ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனினும், கோத்தபய ராஜபட்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரி போராட்டம் தொடர்கிறது.

  இந்நிலையில், ராஜபக்சே பதவி விலகியுள்ளதை குறிப்பிட்டு இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மகிளா ஜெயவர்த்தனே தனது ட்விட்டர் பக்கத்தில், ஒருவர் கீழறங்கி விட்டார். இன்னும் ஒருவர் உள்ளார் என குறிப்பிட்டு கோத்தபயா ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  இதையும் படிங்க: இலங்கையில் வன்முறை - ஆளுங்கட்சி எம்.பி அடித்துக்கொலை

  இதேபோல், மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான குமார் சங்ககரா, தங்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் உரிமைகளுக்காக போராடும் மக்கள் அரசாங்கத்தில் உள்ள குண்டர்களின் ஆதரவு குண்டர்கள் மூலம் தாக்கப்பட்டுள்ளனர். இது அருவறுக்கத்தக்கது. அரசு ஆதரவால் நிகழ்ந்த வன்முறை இது.  இந்த வன்முறை திட்டமிட்ட ஒன்று’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  மேலும் படிக்க: உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக குழந்தைகளிடம் பரவும் மர்ம கல்லீரல் நோய்: ஆய்வை தொடங்கிய அமெரிக்கா

  இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரரான வனிந்து ஹசரங்கா, கோழைத்தனம் மற்றும் காட்டுமிராண்டித்தனம்! இந்த இரண்டு வார்த்தைகள் தான் இன்று அப்பாவித்தனமான, அமைதியான முறையில் இலங்கை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சுருக்கமாக கூறும் வார்த்தைகள். நம் நாட்டில் அத்தகைய தலைமை இருப்பதை நினைத்தும் நான் ஏமாற்றமடைகிறேன். இந்த நோக்கத்திற்காக ஒன்றிணைந்து நிற்கும் அனைவருடனும் என் இதயம் இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Mahinda rajapaksa, Srilanka