முகப்பு /செய்தி /உலகம் / கடும் தட்டுப்பாடு: பெட்ரோல்-டீசல் வாங்க கட்டுப்பாடு

கடும் தட்டுப்பாடு: பெட்ரோல்-டீசல் வாங்க கட்டுப்பாடு

இலங்கை பொருளாதார நெருக்கடி

இலங்கை பொருளாதார நெருக்கடி

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவற்றை வாங்க இலங்கை அரசு உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளது. அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கழகம் விதித்துள்ள உச்சவரம்பின்படி,  இருசக்கர வாகனங்களுக்கு  ஒரு தடவை அதிகபட்சமாக இலங்கை மதிப்பில் ரூ.1000 வரை மட்டுமே எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

பொருளாதார சிக்கலில் இலங்கை தவித்துவரும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பெட்ரோல், டீசல் ஆகியவற்றை வாங்குவதற்கு உச்ச வரம்பை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ள இலங்கையில், உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.  பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் தான் முக்கிய காரணம் என்றும், அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

எரிபொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதோடு அவற்றிற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்தியா 2,70,000 மெட்ரிக் டன் அளவுக்கு பெட்ரோல், டீசல் ஆகியற்றை இலங்கைக்கு வழங்கியுள்ளது. எனினும், தட்டுப்பாடு குறைந்தபாடில்லை.  பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக பெட்ரோல் பங்க்களில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவற்றை வாங்க இலங்கை அரசு உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளது. அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கழகம் விதித்துள்ள உச்சவரம்பின்படி,  இருசக்கர வாகனங்களுக்கு  ஒரு தடவை அதிகபட்சமாக இலங்கை மதிப்பில் ரூ.1000 வரை மட்டுமே எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: ட்விட்டருக்கு பதிலாக இலங்கையை வாங்குங்கள் எலான் மஸ்க்- கோரிக்கை வைக்கும் நெட்டீசன்கள்

ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்கள், ரூ.1,500 வரை எரிபொருள் வாங்கிக் கொள்ளலாம். கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்கள் ரூ.5 ஆயிரம் வரை எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம்,  பஸ், லாரி மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Diesel, Petrol, Srilanka