• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இலங்கையிலும் கொட்டித் தீர்க்கும் கனமழை: 6 பேர் உயிரிழப்பு- பொதுமக்கள் பாதிப்பு

இலங்கையிலும் கொட்டித் தீர்க்கும் கனமழை: 6 பேர் உயிரிழப்பு- பொதுமக்கள் பாதிப்பு

இலங்கை மழை

இலங்கை மழை

இலங்கையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த இருதினங்களாக பரவலாக மழைபெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முந்தினம் முதல் நேற்று காலை வரையிலான நேரத்தில் 200 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. தமிழகத்தில் மழை தொடரும் நிலையில், தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது, நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக சென்னையின் முக்கியப் பகுதிகள் பலவும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், மூன்று தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுள்ளது.

    வடகிழக்கு பருவமழையின் காரணமாக தென் இந்திய மாநிலங்களில் கடும் மழை பெய்துவரும் நிலையில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலும் மழை கொட்டித் தீர்த்துவருகிறது. ரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், பதுளை, புத்தளம், காலி, திருகோணமலை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளன. பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் ரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் 1143 குடும்பங்களைச் சேர்ந்த 4300ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இயற்கை பேரிடர்களால் இருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கனமழையின் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 63 குடும்பங்களைச் சேர்ந்த 250ற்கும் அதிகமானோர் பாதுகாப்பு இடங்களை நோக்கி அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்தநிலையில், காற்றதழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்கு கரை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்காரணமாக, வங்கக் கடலை ஒட்டியை பகுதிகளில் 60-70 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன் சில பகுதிகளில் கடும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: