Home /News /international /

''இந்தியா எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியுள்ளது'' - இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் நெகிழ்ச்சி

''இந்தியா எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியுள்ளது'' - இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் நெகிழ்ச்சி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்கா

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்கா

நெருக்கடி நிலைக்கு தமிழர்களும், முஸ்லிம்களும்தான் காரணம் என்ற பொய்யான தகவலை இலங்கை அரசில் உள்ள சில அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர்.

பொருளாதா நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா தங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியிருப்பதாக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்கா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ’இந்திய பிரதமர் மோடி தாராள மனம் கொண்டவர். அவர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அமைவதற்கு நிதியுதவி செய்தார். எங்களைப் பொருத்தளவில் இந்தியா மூத்த அண்ணனைப் போன்ற நாடு.

இலங்கைக்கு நிதியுதவி அளிப்பதுடன் இங்கு என்ன நடக்கிறது என்பதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கை எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இதையும் படிங்க - Sri Lanka crisis- இனம், மதம், கட்சியை தள்ளி வையுங்கள்- இலங்கை பொருளாதார வீழ்ச்சி குறித்து கிரிக்கெட் வீரர் முரளிதரன் பேட்டி

இலங்கையின் தேவை என்ன என்பதில் இந்தியா கவனமாக இருக்கிறது. உணவு, மருந்து பொருட்கள், எரிபொருட்கள் உள்ளிட்டவைகளை இந்தியா அனுப்பி மிகப்பெரிய அளவில் எங்களுக்கு உதவியுள்ளது.

எனது நாட்டில் நடக்கும் பிரச்னைகள் வன்முறையை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதுதான் எனது கவலையாக இருக்கிறது. இன்னொரு போரை மக்கள் தொடங்கி விடக்கூடாது. போரால் நாங்கள் பல காலம் துன்பத்தை அனுபவித்து விட்டோம்.

இதையும் படிங்க - இலங்கையில் அவசர நிலை பிரகடனம் வாபஸ்: அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு தமிழர்களும், முஸ்லிம்களும்தான் காரணம் என்ற பொய்யான தகவலை, இலங்கை அரசில் உள்ள சில அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர். அவர்கள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறார்கள். கொரோனா பாதிப்பை இலங்கை அரசு சரியாக கையாளவில்லை’ என்று தெரிவித்தார்.


இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்தா ராஜபக்சேவும் பதவிவிலகக் கோரி, நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, கடந்த ஒன்றாம் தேதி அவசரநிலையை அதிபர் பிறப்பித்தார்.

அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்த நிலையில், 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சாப்ரி, 24 மணிநேரத்துக்குள் பதவி விலகினார். நாடாளுமன்றம் நேற்று கூடிய சூழலில், அரசுக்கு அளித்துவரும் ஆதரவை 41 எம்.பி.க்கள் வாபஸ் பெற்றனர். இதனால், அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

இந்நிலையில், அவசர நிலையை நேற்றிரவு முதல் திரும்பப் பெறுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக நார்வே, ஈராக் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய பகுதிகளில் உள்ள தங்களது நாட்டின் தூதரகங்களை வரும் 30-ம் தேதி முதல் மூட வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Srilanka

அடுத்த செய்தி