ஈழத் தமிழர்கள் பகுதியில் கடும் வெள்ளம்: 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

இந்த மழையால் குறிப்பாக, முல்லைத் தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் யாழ்பானம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன

ஈழத் தமிழர்கள் பகுதியில் கடும் வெள்ளம்: 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!
இலங்கை வெள்ளம்
  • News18
  • Last Updated: December 24, 2018, 9:01 PM IST
  • Share this:
இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் வடமாகாணப் பகுதியில் பெய்யும் கடும் மழை காரணமாக 60,000 மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் நிறைந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த மழையால் குறிப்பாக முல்லைத் தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் யாழ்பானம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதிபர் மைத்திரிபாலா சிறிசேனாவின் உத்தரவுப்படி, ராணுவத்தினரும் காவல்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தெரிவித்த வானிலை ஆய்வு மையம், வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கடும் மழை இருக்கும் என்று எச்சரிக்கைப்பட்டுள்ளது. இந்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், பள்ளிகள் மற்றும் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Also see:
First published: December 24, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading