• HOME
 • »
 • NEWS
 • »
 • international
 • »
 • இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு!

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு!

உலகை உலுக்கிய இலங்கை குண்டு வெடிப்பு

உலகை உலுக்கிய இலங்கை குண்டு வெடிப்பு

இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பே காரணம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ரஜிதா செனரத்னே குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 24 பேரில் மூன்று பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பே காரணம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ரஜிதா செனரத்னே குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 24 பேரில் மூன்று பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

  ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின் போது இலங்கை தலைநகர் கொழும்புவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது, அங்குள்ள 4 தேவாலயங்கள் மற்றும் 3 ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 35 வெளிநாட்டினர் உட்பட இதுவரை 310 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

  கடந்த 21-ம் தேதி, உலகையே உலுக்கிய இச்சம்வத்தில் இருந்து மக்கள் மீளாத நிலையில், கொழும்புவில் நேற்று 9-வது இடத்தில் குண்டு வெடித்தது. கொச்சிக்கடை கந்தனை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் இருந்து வெடிகுண்டை, செயலிழக்கச்செய்யும் போது எதிர்பாராதவிமாக வெடித்துள்ளது.

  படிக்க... இலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்த ஸ்காட்லாந்து கோடீஸ்வரர்!

  9-வது இடத்தில் நேற்று வெடிகுண்டு வெடித்த போதும், அதில் யாருக்கும் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்த போதும், மக்கள் மரணி பீதியில் இருந்து மீளவில்லை.

  மேலும், போலீசார் மேற்கொண்ட சோதனையில் விமான நிலையம் அருகே வெடிகுண்டு ஒன்றும், கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்களும் கண்டெடுக்கப்பட்டன.

  இலங்கையில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பே காரணம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ரஜிதா செனரத்னே குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், வெளிநாட்டு அமைப்பின் சதிவேலை இருப்பதாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

  இதற்கிடையில், உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் அரசு ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கொழும்பு பேராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.

  தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 3 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், இவர்களில் 2 பேர் சென்னை வந்து சென்றதற்கான ஆதாரம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  பார்க்க... Photos | உலகை உலுக்கிய குண்டு வெடிப்பு... மீளமுடியாத சோகத்தில் இலங்கை...!

  குண்டுவெடிப்பில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 35 உயிரிழந்ததில், இந்தியாவைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆகியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ரமேஷ், ல‌ஷ்மி நாராயண், ரங்கப்பா, ஹனுமந்தராயப்பா ஆகிய 4 பேர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ரசீனா ஆகியோரும் அடங்கும்.

  இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரிய மனிதவெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து, நாளை தேசிய துக்கதினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவரில் உள்ள மின்விளக்குகள் நேற்று இரவு அணைக்கப்பட்டிருந்தன.

  Also Watch: இலங்கை குண்டுவெடிப்பில் உயிர் தப்பிய சென்னை தம்பதி! 

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Anand Kumar
  First published: