Home /News /international /

Sri Lanka crisis- இனம், மதம், கட்சியை தள்ளி வையுங்கள்- இலங்கை பொருளாதார வீழ்ச்சி குறித்து கிரிக்கெட் வீரர் முரளிதரன் பேட்டி

Sri Lanka crisis- இனம், மதம், கட்சியை தள்ளி வையுங்கள்- இலங்கை பொருளாதார வீழ்ச்சி குறித்து கிரிக்கெட் வீரர் முரளிதரன் பேட்டி

முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன்

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் இனம், மதம், கட்சி ஆகியவற்றை ஒதுக்கி வைத்து விட்டு ஒரு தேசமாக ஒன்றுபட வேண்டும், அப்போதுதான் இப்போதைய இலங்கையின் சீரழிவு நிலையிலிருந்து மீட்க முடியும், இப்படித்தான் இது நடக்க முடியும் என்று உலக சாதனை சுழற்பந்து மேதை முத்தையா முரளிதரன் இந்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

மேலும் படிக்கவும் ...

    தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனுக்காக இந்தியாவில் இருக்கும் முரளிதரன், இலங்கையின் பணமதிப்பு இழப்புக்குப் பிறகு வெடித்துள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து பங்குதாரர்களும் - அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் நிதி வல்லுநர்கள் - ஒன்றாக உட்கார வேண்டும் என்று கூறினார்.

    ஸீ மீடியாவுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

    சக்தி வாய்ந்த அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் தங்கள், இனம், மதம், கட்சி ஆகியவற்றை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு இந்தச் சூழ்நிலையை சமாளிக்க ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். இப்படித்தான் இது நடக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

    இந்த நெருக்கடிக்குப் பல காரணங்கள் உள்ளன. கூட்டாக அனைத்தும் சேர்ந்துதான் இதற்குக் காரணமாகியுள்ளன. ஒருநாளில் இத்தகைய நிலை ஏற்பட்டு விடவில்லை. பெருந்தொற்று காலம், வேலைகள் பறிபோயின. பெட்ரோல், டீசல் விலைகளின் அதிகரிப்பு, நிச்சயம் நிர்வாக மோசடிகளும் காரணம். ஆனால் மோசடி நிர்வாகம் மட்டுமே காரணம் என்று குற்றஞ்சாட்ட முடியாது.

    நம் அண்டைநாடான இந்தியா, சீனா உதவி புரிய வேண்டும். பன்னாட்டு நிதியமைப்பு இந்தச் சூழ்நிலைக்குத் தக்கவாறான உதவியைச் செய்ய வேண்டும். இலங்கை ஒரு சிறிய நாடு, இங்கு இறக்குமதிகள் தான் அதிகம் ஏற்றுமதிகள் குறைவு. அதனால் டாலர்களுக்கான நெருக்கடி முதலில் வந்தது. நிறைய பொருட்களை நாங்கள் இறக்குமதிதான் செய்ய நேர்ந்தது. இப்போது சரக்குக் கட்டணங்களும் கடுமையாக அதிகரித்துள்ளது.

    அதாவது 100 டாலரில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு இன்று 700 டாலர்கள் கொடுக்க வேண்டியுள்ளது. எரிசக்தி பில்கள் எகிறின. ஒரு நாளில் இதெல்லாம் வந்து விடவில்லை, இது தொடர்ச்சியாக இப்படி நடந்து கொண்டே இருந்ததன் விளைவு.

    இவ்வாறு கூறினார் முத்தையா முரளிதரன்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Muttiah Muralitharan, Srilankan govt

    அடுத்த செய்தி