Home /News /international /

இலங்கையில் அனைத்து கட்சியினருடன் அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர ஆலோசனை... மத்திய வங்கி கவர்னர் ராஜினாமா

இலங்கையில் அனைத்து கட்சியினருடன் அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர ஆலோசனை... மத்திய வங்கி கவர்னர் ராஜினாமா

கோத்தபய ராஜபக்சே

கோத்தபய ராஜபக்சே

சர்வதேச நிதி அமைப்புகளில் இலங்கை பெற்றுள்ள கடன் அளவு 50 ஆயிரம் கோடியை தாண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை சரி செய்யும் முயற்சியாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சியினருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே, பொருளாதார சிக்கல்களுக்கு பொறுப்பேற்று இலங்கை மத்திய வங்கி கவர்னர் ராஜினாமா செய்துள்ளார்.

தற்போதைய சூழலில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை உடடினயாக மீண்டு வரும் வாய்ப்பு இல்லையென்றே தெரிகிறது. வீதியில் இறங்கி போராட்டம் நடத்த பொதுமக்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகள் பதற்றம் நிறைந்த இடங்களில் குவிக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நீக்கப்பட்டது.  அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சேவை தவிர்த்து மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்திருப்பதால், இலங்கையில் அசாதாரண சூழல் காணப்படுகிறது.

இதையும் படிங்க - ''10 வயது சிறுமிகளை பலாத்காரம் செய்கிறார்கள்'' : ரஷ்ய வீரர்கள் மீது உக்ரைன் குற்றச்சாட்டு

இதற்கிடையே இலங்கையின் தலைமை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் ஸ்ரீலங்காவின் கவர்னர் அஜித் நிவாட் கப்ரால், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நெருக்கடி அதிகரித்திருக்கும் சூழலில் அதனை சமாளிக்காமல், பொறுப்புடைய நபர்கள் ஒவ்வொருவராக இலங்கையில் ராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவசர நிலை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பொருளாதார நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க அனைத்து கட்சியினருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிங்க - இலங்கையில் 26 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா.. மகிந்த ராஜபக்சே மட்டும் பிரதமர் பதவியில் தொடர முடிவு

நாட்டின் தேவை கருதி இந்த நெருக்கடியான சூழலில், எதிர்கால சந்ததியின் நலனை கவனத்தில் கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. இன்றைய தினத்தை கருப்பு திங்கள் என்று அழைத்துள்ள இலங்கை பொதுமக்கள் வாய்ப்புள்ள இடங்களில் அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கை மத்திய மாகாணத்தில் நூற்றுக்கணக்கான பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை கலைப்பதற்காக தடியடி நடத்திய பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இலங்கையின் மக்கள் தொகை 2.20 கோடியாக உள்ளது. சர்வதேச நிதி அமைப்புகளில் இலங்கை பெற்றுள்ள கடன் அளவு 50 ஆயிரம் கோடியை தாண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by:Musthak
First published:

Tags: Srilanka

அடுத்த செய்தி