முகப்பு /செய்தி /உலகம் / இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைய என்ன காரணம்? அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்...

இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைய என்ன காரணம்? அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்...

இலங்கையில் அடுத்தடுத்து அமைந்த அரசுகள் உற்பத்தி மற்றும் சேவைத்துறையில் அக்கறை காட்டவில்லை.

இலங்கையில் அடுத்தடுத்து அமைந்த அரசுகள் உற்பத்தி மற்றும் சேவைத்துறையில் அக்கறை காட்டவில்லை.

இலங்கையில் அடுத்தடுத்து அமைந்த அரசுகள் உற்பத்தி மற்றும் சேவைத்துறையில் அக்கறை காட்டவில்லை.

  • Last Updated :

இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதாரம் மோசமான நிலையை சந்தித்துள்ளது. இதற்கு சீனாதான் முக்கிய காரணம் என்று கூறப்படும் நிலையில், இலங்கையை இந்த அவல நிலைக்கு எது தள்ளியது என்பதை அலசுகிறது இந்த பதிவு.

இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எரிபொருட்கள் பற்றாக்குறையால் தினமும் 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டனர்.

இதைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சீனாவிடம் தொடர்ந்து கடன் வாங்கிய இலங்கை அதனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் கடன்களை கேட்டபோது சீனாவிடம் இருந்து முறையான பதில் ஏதும் வரவில்லை.

பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களுக்கு இலங்கை வெளிநாடுகளை நம்பி, அங்கிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதனை மேற்கொள்ள போதுமான பணம் டாலரில் இல்லாததால், பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களை கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது.

சீனாவின் நவீன காலனியாக இலங்கை மாறியுள்ளது. அங்கு சர்வதேச தரத்திலான துறைமுகம், சுதந்திரமான வர்ததக மண்டலம் ஆகியவை சிங்கப்பூர் மற்றும் துபாய்க்கு இணையாக இலங்கை வர்த்தகத்தை மாற்றும் என்று சீனா நம்புகிறது.

1948 பிப்ரவரி 8-ம்தேதி இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற்ற இலங்கை, 1972-ல் குடியரசாக மாறும் வரையில் இங்கிலாந்தின் காமன் வெல்த் டொமினியனாக இருந்து வந்தது.

பிரிட்டிஷார் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் அதனை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய வர்த்தகர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அந்த காலகட்டத்திலேயே 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஐரோப்பியர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் குறைவான அமெரிக்கர்கள் இலங்கையில் இருந்துகொண்டே வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது சிலோன் என இலங்கை அழைக்கப்பட்டு வந்தது. அதன் ரூபாய்க்கு உலக அளவில் நல்ல மதிப்பு இருந்தது.

அதன்பின்னர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சிரிமாவோ பண்டாரநாயகா, அனைத்து தனியார் நிறுவனங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேற்றினார். 1977-ல் பொறுப்பில் இருந்த ஜூனியர் ஜெயவர்த்தனே, பண்டார நாயகாவின் சோசியலிச கொள்கையை மாற்றி அனைத்து தரப்பினருக்குமான தாராளமயமாதல் கொள்கையை கொண்டு வந்தார்.

தெற்காசிய நாடுகளில் தாராளமயமாக்கல் பொருளாதார கொள்கையை கொண்டு வந்த முதல் நாடாக இலங்கை மாறியது.

விடுதலை புலிகள் உடனான போர் 25 ஆண்டுகள் நீடித்ததால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அரசுகள் யாரும் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை.

டீ, ஏலக்காய், மசாலா பொருட்கள், ரப்பர், தேங்காய், கடல்சார் உணவு பொருட்கள், ஆபரணங்கள், ஜவுளிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை அல்லாத பொருட்களை இலங்கை உற்பத்தி செய்து அவற்றை ஏற்றுமதி செய்தது.

அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு வெளிநாடுகளை இலங்கை நம்பியிருந்தது. வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை மக்கள் ஆண்டுக்கு 3-4 பில்லியன் டாலர்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலா துறையில் சுமார் 30 லட்சம்பேர் இலங்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில் ஆண்டுக்கு 4-5 பில்லியன் டாலர்கள் பொருளாதாரம் ஈட்டப்படுகிறது.

இலங்கையில் அடுத்தடுத்து அமைந்த அரசுகள் உற்பத்தி மற்றும் சேவைத்துறையில் அக்கறை காட்டவில்லை. விடுதலை புலிகள் உடனான போர் முடிவுக்கு வந்த பின்னர், அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு முதலீடுகள் இலங்கையில் குவிந்தன. இது கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

2009 - 12 ஆண்டுகளில் இலங்கை சீனாவிடம் இருந்து வாங்கிய கடன்தான் அதன் எதிர்காலத்தின் மீது பேரிடியாக அமைந்தது. இதில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியம் உதவி செய்தபோதிலும், இலங்கை தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

2019-ல் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு மற்றும் 2 ஆண்டுகால கொரோனா லாக் டவுன் ஆகியவை இலங்கையின் பொருளாதாரத்தை பாதாளத்திற்கு தள்ளின.

இவ்வளவு பிரச்னைகள் உள்ள இலங்கை, தற்போது திவாலாகும் நிலைக்கும், பஞ்சத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

top videos

    ராஜபக்சே அரசால் இலங்கையை மீட்க முடியாது என்றும் சர்வதேச நாடுகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்குள்ள பெரும்பான்மை மக்கள் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    First published:

    Tags: Srilanka