இலங்கைத் தலைமைத் தளபதி நுழைவதற்கு தடை விதித்த அமெரிக்காவுக்கு இலங்கை கண்டனம்

இலங்கைத் தலைமைத் தளபதி நுழைவதற்கு தடை விதித்த அமெரிக்காவுக்கு இலங்கை கண்டனம்
சாவேந்திர சில்வா
  • Share this:
இலங்கை ராணுவத் தலைமை தளபதி சாவேந்திர சில்வா அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. 

2009-ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரில் இலங்கை ராணுவத்தின் 58-ஆவது பிரிவுக்கு தலைமை வகித்த சாவேந்திர சில்வா, தமிழ் மக்களுக்கான மருத்துவ வசதியையும், மனிதாபிமானப் பொருள்களையும் நிறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இவர் மீது ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் உரிமை மீறல் குற்றச்சாட்டு கடந்த 2013ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

போரின்போது, ஈழத் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்குக் குடிநீர், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல முயன்றபோது அதைத் தடுத்தவர் சவேந்திர சில்வா என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. போருக்குப் பின் சவேந்திர சில்வாவை இலங்கை அரசு ஐ.நா.வுக்கான நிரந்தர துணைத் தூதராக நியமித்தது. ஆனால், அதற்கு ஐ.நா. சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், தற்போது இலங்கை ராணுவத்தின் தளபதியாக சவேந்திர சில்வா இருந்து வருகிறார். அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ள சவேந்திர சில்வா திட்டமிட்டிருந்தார்.

இந்தநிலையில், இலங்கை ராணுவத் தலைமை தளபதி சாவேந்திர சில்வா அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பேயோ விடுத்துள்ள அறிக்கையில், மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தண்டனை விதிக்கப்படுவது அவசியமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை சீர்திருத்தத்தை முன்னெடுக்கவும், நீதி மற்றும் நல்லிணக்கத்தைத் தொடரவும் இலங்கை அரசு முயற்சிக்க வேண்டும் என்று மைக் பாம்பேயோ கேட்டுக் கொண்டுள்ளார். சாவேந்திர சில்வாவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

Also see:

 
First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading