முகப்பு /செய்தி /உலகம் / பாகிஸ்தானில் இலங்கை நாட்டவர் உயிருடன் எரித்துக்கொலை: கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பாகிஸ்தானில் இலங்கை நாட்டவர் உயிருடன் எரித்துக்கொலை: கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இலங்கை நாட்டவர் படுகொலை

இலங்கை நாட்டவர் படுகொலை

குரான் வாசகங்கள் இருந்த சுவரொட்டியைக் கிழித்து குப்பையில் எறிந்ததன் மூலம் இஸ்லாம் மதத்தை பிரியந்தா குமாரா இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டிய அவா்கள், தொழிற்சாலையிலிருந்து அவரை வெளியே இழுத்து வந்து கொடூரமாகத் தாக்கினா்.

  • Last Updated :

பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை நிந்தித்ததகாக கூறி இலங்கையை சேர்ந்த பிரியந்த தியவதன குமார என்பவர் கொல்லப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த  படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இலங்கை,  கும்பல் படுகொலையில் ஈடுபட்ட மத அடிப்படைவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், சியால்கோட் மாவட்டத்திலுள்ள ஆடை  தொழிற்சாலையில்  இலங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதன குமார  பொதுமேலாளராகப் பணியாற்றி வந்தாா். அவரது  தொழிற்சாலையின் வெளியே மத அடிப்படைவாதக் கட்சியான தெஹ்ரீக்-ஏ-லப்பைக் பாகிஸ்தான் கட்சியின் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.  அந்த சுவரொட்டியை பிரியந்தா  தியவதன குமாரா கிழித்து குப்பையில் எறிந்ததாகக் கூறப்படுகிறது.

குப்பையில் வீசப்பட்ட அந்த சுவரொட்டியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் வாசகங்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. பிரியந்தா  தியவதன குமாரா சுவரொட்டியை கிழித்த தகவல் வெளியே பரவியது. இதையடுத்து ஹ்ரீக்-ஏ-லப்பைக் பாகிஸ்தான் கட்சியினர் உட்பட  நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரது தொழிற்சாலை எதிரே குழுமினர்.

பின்னர், தொழிற்சாலைக்குள் நுழைந்து பிரியந்தா தியவதன குமாராவை வெளியே இழுத்து  வந்து கட்டையாலும் கல்லாலும் அடித்து கொடூரமாக தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார். எனினும் வெறி தீராத அந்த கும்பல், பிரியந்தா தியவதன குமாராவின் உடலை தீ வைத்து கொளுத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த நிகழ்வுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவிட் தொற்று பரவல் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு பின் இந்த தீவு நாட்டில் முதல் பாதிப்பு

குரான் வாசகங்கள் இருந்த சுவரொட்டியைக் கிழித்து குப்பையில் எறிந்ததன் மூலம் இஸ்லாம் மதத்தை பிரியந்தா குமாரா இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டிய அவா்கள், தொழிற்சாலையிலிருந்து அவரை வெளியே இழுத்து வந்து கொடூரமாகத் தாக்கினா்.

தங்கள் நாட்டு குடிமகன் பாகிஸ்தானில் கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொத்தபயா மற்றும் மகிந்த ராஜபக்சா தலைமையிலான ஆளும் கட்சி,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தொலைபேசியில் அழைத்து தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்த கும்பல் படுகொலை தொடர்பாக இம்ரான்கான் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது. கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்று இம்ரான்காந்தெரிவித்துள்ளார்.

மேலும் படிங்க: 24 நாடுகளுக்கு ஒமைக்ரான் திரிபு பரவல் - உலக சுகாதார மையம் அறிவிப்பு

top videos

    இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சாவின் மகனும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சருமான  நமால் ராஜபக்சா கூறுகையில், பாகிஸ்தானில் தீவிரவாதகும்பல்களால் பிரியந்த தியவதன கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புரிந்துகொள்ள முடியாதது. இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப் போவதாக பிரதமர் இம்ரான்கானின் வாக்குறுதியை நான் பாராட்டினாலும், தீவிரவாத சக்திகளை சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால் இது யாருக்கும் நேரலாம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

    First published:

    Tags: Man killed, Srilanka