Home /News /international /

இலங்கையில் இன்று இரவு முதல் அவசரநிலை பிரகடனம்!

இலங்கையில் இன்று இரவு முதல் அவசரநிலை பிரகடனம்!

இலங்கையில் குண்டு வெடிப்பு நடந்த தேவாலயம்

இலங்கையில் குண்டு வெடிப்பு நடந்த தேவாலயம்

தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பலர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தாலும், மைய குற்றவாளி யார் என்பதும்? எதற்காக குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது என்பதும் தெரியவில்லை.

  • News18
  • Last Updated :
    இலங்கையில் நேற்று 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று இரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் மைத்ரிபால சிறீசேன அறிவித்துள்ளார்.

    இலங்கையின் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நேற்று காலை தொடர்ந்து குண்டுகள் வெடித்தது.

    படிக்க... இலங்கை: ’ரத்த தானம் செய்யுங்கள்...’ ஃபேஸ்புக் பதிவால் உதவிக்குக் குவிந்த மக்கள்!

    8 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 290 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஈஸ்டர் தினத்தன்று நடந்த இந்த கோர சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.

    தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பலர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தாலும், மைய குற்றவாளி யார் என்பதும்? எதற்காக குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது என்பதும் தெரியவில்லை.

    இந்நிலையில், இலங்கை முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் முயற்சியாக இன்று இரவு முதல் அவசரநிலை சட்டம் அமலில் கொண்டுவரப்படும் என்று இலங்கை அதிபர் சிறீசேன அறிவித்துள்ளார்.

    நாளை காலை வரை இந்த அவசர நிலை அமலில் இருக்கும் என்றும், நாளை தேசிய துக்க தினமான அனுசரிக்கப்படும் என்றும் அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

    Published by:Sankar
    First published:

    Tags: Srilanka bomb blast

    அடுத்த செய்தி