முகப்பு /செய்தி /உலகம் / “பிரபாகரன் உயிரோடு இல்லை” - இலங்கை ராணுவம் திட்டவட்டம்!

“பிரபாகரன் உயிரோடு இல்லை” - இலங்கை ராணுவம் திட்டவட்டம்!

பிரபாகரன், ரவி ஹெரத்

பிரபாகரன், ரவி ஹெரத்

இலங்கையை கட்டுப்பாட்டில் கொண்டு வர உண்மைக்கு மாறான மிகவும் மலினமான பிரசார உத்தியை இந்தியா கையாள்கிறது - நிக்சன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaColomboColombo

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறுவது, மலிவான உத்தி என்று இலங்கை பத்திரிகையாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளதாகக் கூறினார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். பிரபாகரன் அனுமதியுடன் தான் இந்த தகவலை வெளியிடுவதாகக் கூறிய பழ.நெடுமாறன், பிரபாகரனின் மனைவியும், மகளும் உரிய நேரத்தில் மக்கள் முன்பு தோன்றுவார்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமிர்தநாயகம் நிக்சன் என்பவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் இலங்கையை கட்டுப்பாட்டில் கொண்டு வர உண்மைக்கு மாறான மிகவும் மலினமான பிரசார உத்தியை இந்தியா கையாள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறி இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் மற்றுமொரு ராணுவக் கெடுபிடி மற்றும் வேறு வகையிலான தமிழ் இன அழிப்புக்கு இந்தியா வழிவகை செய்ய முயற்சிப்பதாக சந்தேகம் எழுவதாக கூறியுள்ளார்.

இலங்கையில் அரசியல் பொருளாதார லாபங்கள் கிடைத்தால் போதும் என்ற நோக்கில் இந்தியா முயற்சிக்கிறதா என்று இலங்கை பத்திரிகையாளர் அமிர்தநாயகம் நிக்சன் கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவின் நரித்தன உத்திக்கு பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் ஆகியோர் பலிகடா ஆகி விட்டனர் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதனிடையே பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான தகவலை இலங்கை ராணுவ செய்திதொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹெரத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

First published:

Tags: LTTE, Prabhakaran, Srilanka Army