ஹோம் /நியூஸ் /உலகம் /

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரமளிக்கும் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படும் - அதிபர் ரணில் உறுதி

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரமளிக்கும் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படும் - அதிபர் ரணில் உறுதி

பொங்கல் விழாவில் ரணில் பேச்சு

பொங்கல் விழாவில் ரணில் பேச்சு

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்று பேசினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, Indiacolombo colombo

இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும், 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உறுதி அளித்துள்ளார். இலங்கையில் கடந்தாண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.ராஜபக்ச சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில், நேற்று தமிழர் திருநாள் பொங்கலையொட்டி இலங்கையின் யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கையின் தெற்கு பகுதி மக்களும் குரல் கொடுப்பதாக கூறினார். எனினும், தமிழர்கள், மலையக தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து ஆராய முயற்சிப்பதாகவும், இதுதொடர்பாக, அரசியல் தலைவர்களை கலந்தாலோசிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் நாட்டை கட்டமைக்க விரும்புவதாக கூறியுள்ள அவர், ஓரிரு ஆண்டுகளில் படிப்படியாக அமுல்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

1987ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே 13ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வை இந்த சட்டத்திருத்தம் அளிக்கிறது. இதை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. இந்தியா இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அடுத்த சில நாள்களில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதையும் படிங்க: Miss Universe 2022 : இறுதி போட்டியில் புதிய பிரபஞ்ச அழகி கூறிய வெற்றிக்கான பதில் இது தான்!

அப்போது நடைபெறும் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் இலங்கை தமிழ் வாழ்வுரிமை, 13ஆவது சட்டதிருத்தம் ஆகியவை குறித்து பேசி அழுத்தம் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பின்னணியில் தான் அதிபர் ரணில், 13ஆவது சட்ட திருத்தம் குறித்து தமிழர்களிடம் தற்போது உறுதி கொடுத்துள்ளார்.

First published:

Tags: Ranil Wickremesinghe, Sri Lanka, Sri Lanka President, Tamils