• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ராஜபக்சேவுக்கு பிரதமர் நாற்காலி - அடுத்தவாரம் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

ராஜபக்சேவுக்கு பிரதமர் நாற்காலி - அடுத்தவாரம் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா

Sri Lanka Political Crisis | இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே திடீரென நீக்கப்பட்டு ராஜபக்சே நியமிக்கப்பட்டது அந்நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவும் சூழலில் பாராளுமன்றத்தை முடக்கி வைத்த தனது உத்தரவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திரும்பப் பெற்றுள்ளார். அடுத்தவாரம் கூட உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சேவுக்கு பிரதமர் நாற்காலி அளிக்க சபாநாயகர் ஒத்துக்கொண்டுள்ளார்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே கடந்த 23-ம் தேதி திடீரென நீக்கப்பட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே நியமிக்கப்பட்டார். அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இந்த நடவடிக்கை அந்நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது. தன்னை நீக்கியது அரசியல் சாசனப்படி செல்லாது எனக் கூறிய ரணில் விக்கிரமசிங்கே, தான் பிரதமராக நீடிப்பதாக அறிவித்தார்.

இலங்கை பிரதமராக பொறுப்பேற்ற ராஜபக்சே


புதிய பிரதமராக பொறுப்பேற்ற ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையும் கடந்த திங்களன்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அந்நாட்டு பாராளுமன்றத்தை 16-ம் தேதிவரை முடக்கிவைத்து சிறிசேனா உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை குறிப்பிட்டு, சபாநாயகர் கரு ஜெயசூரியா, “நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில்தான் பிரதமர்” என்று சிறிசேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூரியா


நாடாளுமன்றத்தின் மீதான முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும், ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வலியுறுத்தி வந்தன.

சிறிசேனாவை நேற்று சந்தித்து பேசிய கரு ஜெயசூரியா இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று பாராளுமன்றத்தை முடக்கி வைத்த தனது உத்தரவை சிறிசேனா திரும்பப்பெற்றுள்ளார். வரும் 5-ம் தேதி நாடாளுமன்றம் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கேவே பிரதமர் என கூறி வந்த ஜெயசூரியா நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சேவுக்கு பிரதமர் நாற்காலி வழங்க சம்மதித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Ranil vikramasinge, ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்கிரமசிங்க


அன்றைய தினம் ராஜபக்சே அரசு மீதான வாக்கெடுப்பு நடக்குமா? என்பது தெரியவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க 113 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், ராஜபக்சேவுக்கு 95 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. ரணில் வசமுள்ள எம்.பி.க்களை இழுக்கும் வேலைகளும் ராஜபக்சே சார்பில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டணி, 6 உறுப்பினர்களை கொண்ட ஜே.வி.பி ஆகிய இரண்டும் ரணிலை ஆதரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்..

இந்தோனேசிய விமானம் விழுந்தது எப்படி? இந்திய விமானி செய்தது என்ன?

இலங்கை பிரதமராக ராஜபக்சேவை நியமித்தது ஏன்? சிறிசேனா விளக்கம்

Also See...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: