Home /News /international /

முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வருகை தரும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே..

முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வருகை தரும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே..

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

Ranil Wickremesinghe: இந்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ள ரணில், விரைவில் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இலங்கையின் 26ஆவது பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, முதலில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், 76 வயதான ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நேற்று பதவியேற்றார்.

    தொடர்ந்து இன்று காலை ரணில் விக்ரமசிங்கே தனது அலுவல் பணிகளைத் தொடங்கினார். வரும் திங்கட்கிழமை இலங்கை நாடாளுமன்றம் கூட இருக்கும் நிலையில், நிதி, எரிசக்தி, மின்சக்தி உள்ளிட்ட சில முக்கியத்துறைகளின் அமைச்சர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், முன்னாள் அதிபர் சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சி மற்றும் இதர கட்சிகளைச் சேர்ந்த 53 எம்.பி.க்கள், ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று முடிவு எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.

    இதனிடையே கடும் சவால்களுக்கு மத்தியில் பிரதமராகியிருக்கும் விக்ரமசிங்கே, முதலில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் பொறுப்பேற்ற ரணில், இந்தியாவுடன் நெருங்கிய உறவை விரும்புவதாகவும், இலங்கைக்கு உதவி செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.

    இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்களின் அழுத்தம் காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். ராஜபக்சே குடும்பத்தில் கோத்தபயா மட்டும் அதிபராக தொடர்ந்து நீட்டித்து வருகிறார்.

    இதையும் படிங்க: எவரெஸ்ட் சிகரத்தில் உலகின் மிக உயரமான வானிலை நிலையத்தை அமைத்துள்ள சீனா!

    இந்நிலையில், பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில், பெட்ரோல் , டீசல் மற்றும் மின்தட்டுப்பாட்டை மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை சீராக விநியோகம் செய்வதே அரசின் பிரதான இலக்கு எனக் கூறியுள்ளார். மேலும், விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்ட வர புதிய அமைச்சரவை துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Ranil Wickremesinghe, Sri Lanka political crisis

    அடுத்த செய்தி