• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • #BREAKING இலங்கை நாடாளுமன்றம் தற்காலிகமாக முடக்கப்பட்டது

#BREAKING இலங்கை நாடாளுமன்றம் தற்காலிகமாக முடக்கப்பட்டது

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா.

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா.

நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று ரணில் விக்கரமசிங்கே ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அறிவித்தார். மீண்டும் நவம்பர் 16-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடும் என்று இலங்கை சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது. 

இலங்கையில் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் மைத்திபால சிறிசேனா அதிபராக இருந்து வருகிறார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்து வந்தார். இந்நிலையில், ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி திடீரென உடைந்தது.

இதனை அடுத்து, இலங்கை சுதந்திரா கட்சியின் முன்னாள் தலைவராகவும் முன்னாள் அதிபராகவும் இருந்த மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக  பதவியேற்றுக்கொண்டுள்ளார். அதிபர் மைத்திபால சிறிசேனா முன்னிலையில் ராஜபக்சே அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

ராஜபக்சே பிரதமராக பதவியேற்றது இலங்கை அரசியல் சாசனப்படி செல்லாது. தான் பிரதமராக தொடர்கிறேன் என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடவும் அவர் முடிவு செய்துள்ளார். இதனால், அந்நாட்டில் குழப்பமான சூழல் நிலவியது.

இந்நிலையில் இன்று ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதாக கூறியிருந்தார். ஆனால்  இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அறிவித்தார். 
நவம்பர் 16-ம் தேதி மீண்டும் கூட்டத்தொடர் கூடும் என்றும் இலங்கை சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று ரணில் விக்கரமசிங்கே ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் நாடாளுமன்றம் முடித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: