கடலில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமா? 100-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதால் அதிர்ச்சியில் மீனவர்கள்.. (வீடியோ)

கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது ஏன் என தெரியவில்லை என்று, மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 • Share this:
  இலங்கையின் பனதுரா கடல் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  கொழும்பு புறநகர் பகுதியான பனதுராவில் ஏராளமானோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கடற்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கின. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை, மீண்டும் கடலுக்குள் விடும் பணியில் ஈடுபட்டனர்.

   

      

      

  இது குறித்து விளக்கமளித்துள்ள மீன்வளத்துறை அதிகாரிகள் , ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது ஏன் என தெரியவில்லை என்றும் ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: