முகப்பு /செய்தி /உலகம் / "என் போனை ஏன் அட்டண் பண்ணல!": கூண்டோடு இலங்கை தூதரக அதிகாரிகள் மாற்றம்

"என் போனை ஏன் அட்டண் பண்ணல!": கூண்டோடு இலங்கை தூதரக அதிகாரிகள் மாற்றம்

மைத்ரிபால சிறிசேனா

மைத்ரிபால சிறிசேனா

  • Last Updated :

தொலைபேசி அழைப்புக்கு பதில் தராததால் தனது நாட்டுக்கான ஆஸ்திரிய தூதரை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திரும்பப்பெற்றார்.

இலங்கைக்கான ஆஸ்திரிய நாட்டின் தூதர் பிரியானீ விஜிசேகரா. இவர் பணிசெய்யும் தூதரகம் ஆஸ்திரிய நாட்டின் தலைநகர் வியன்னாவில் அமைந்துள்ளது. இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஆஸ்திரிய தூதரகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். எனினும், யாருமே பதிலளிக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் பிரியானீ விஜிசேகராவும், தூதரக அதிகாரிகள் 5 பேரும் இலங்கைக்கு திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டனர்.

இதுதொடர்பாக,  இலங்கை அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:  அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஆஸ்திரிய தூதரகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது யாருமே பதிலளிக்கவில்லை. தொடர்ந்து அவர் பலமுறை தொடர்புகொள்ள முயன்றபோதும், இதே நிலை நீடித்துள்ளது.

top videos

    இதையடுத்து, இலங்கைக்கான ஆஸ்திரிய தூதரும், தூதரக அதிகாரிகளும்  திரும்பப்பெறப்பட்டுள்ளனர் என்றார் அவர். எனினும்,  மைத்ரிபால சிறிசேனா ஆஸ்திரிய தூதரகத்தை தொலைபேசியில் எதற்காக அவசரமாக தொடர்புகொண்டார்? வெளியுறவு அமைச்சகத்தின் வாயிலாக தூதரகத்தை  தொடர்புகொள்ள அவர் ஏன் முயற்சி செய்யவில்லை? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க அந்த அதிகாரி மறுத்துவிட்டார்.

    First published:

    Tags: Austria embassy, Maithripala Sirisena, Phone call, Priyanee Wijesekera, Sri Lanka President