'இந்தியாவுக்கு எதிராக இலங்கை ஒருநாளும் செயல்படாது’- அதிபர் கோத்தபய ராஜபக்ச!

கோத்தபய ராஜபக்ச

இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்ச தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக வருகிற 29-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இலங்கை எப்போதும் இந்தியாவுடன் இணைந்தேதான் செயல்படும் என இலங்கையின் புதிய அதிபராகப் பொறுப்பேற்று உள்ள கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

  இந்த வார இறுதியில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச டெல்லிக்கு வருகை தருகிறார். இத்தகைய சூழலில் இந்தியா உடனான உறவு குறித்துப் பேசியுள்ளார் கோத்தபய ராஜபக்ச. அவர் கூறுகையில், “இந்தியா உடன் ஒரு நட்பு நாடாகவே இணைந்து செயல்படுவோம்.

  இந்தியாவின் விருப்பங்களுக்கு எதிராக எப்போதும் செயல்படப்போவதில்லை. இலங்கை மய்யமான நாடாகவே இருக்கும். சார்பு இன்றி அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவோம்” என்றுள்ளார்.

  இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்ச தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக வருகிற 29-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். மேலும் தனது அண்டைநாடுகள் உடனான உறவுமுறைகள் குறித்துப் பேசுகையில், “சூப்பர்பவர் நாடுகளுக்கு இடையேயான போட்டியில் நாங்கள் சிக்க விரும்பவில்லை.

  நாங்கள் மிகவும் சிறிய நாடு. போட்டியில் எங்களால் நீடிக்க முடியாது. இந்தியாவின் அக்கறை எங்களுக்கு நன்கு புரிகிறது. அதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையிலான எந்தவொரு செயலிலும் ஈடுபடமாட்டோம்” என்றார்.

  மேலும் பார்க்க: போராட்டத்தின் இடையிலும் 70% வாக்குப்பதிவு- அரசுக்கு எதிராய் அமையுமா ஹாங்காங் தேர்தல்?
  Published by:Rahini M
  First published: