இலங்கை தேர்தலில் பெருவாரியான வெற்றி - ஆட்சியை தக்க வைத்தார் மஹிந்த ராஜபக்ச

(Reuters)

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் மஹிந்த ராஜபட்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மூன்றில் இரு பங்கு இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இலங்கையில் 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக பொதுத்தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில், ஒரு கோடியே 23 லட்சம் பேர் வாக்குகளை பதிவு செய்தனர். நேற்று காலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது முதலே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி முன்னிலை வகித்து வந்தது.

  அதிகாலை நிலவரப்படி அக்கட்சி 68 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று 145 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் தேசிய கட்சி 54 இடங்களிலும், ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தன.

  இலங்கை தமிழ் அரசு கட்சி 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி மூன்றில் இரு பங்கு இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து மஹிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.  தமிழகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சிக்கு வாக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான திரிகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

  கொரோனா பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை சிறப்பாக நடத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மஹிந்த ராஜபட்ச, இந்தியாவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த முனைப்புடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

   
  Published by:Sankar
  First published: