இலங்கையில் மீண்டும் அமலுக்கு வருகிறது மரண தண்டனை: அதிபர் எச்சரிக்கை


Updated: July 12, 2018, 7:32 AM IST
இலங்கையில் மீண்டும் அமலுக்கு வருகிறது மரண தண்டனை: அதிபர் எச்சரிக்கை
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன

Updated: July 12, 2018, 7:32 AM IST
இலங்கையில் மீண்டும் மரண தண்டனை அமலுக்கு வர இருப்பதாக என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன  அறிவித்துள்ளார்.

இலங்கையில் கண்டி கெட்டம்பே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இலங்கையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறைந்திருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் இலங்கையில் மீண்டும் மரண தண்டனை அமலுக்கு வர இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களுக்கான தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகவும்,  அதன்படி ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்ட 19 பேரின் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் 1976ம் ஆண்டுமுதல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மரண தண்டனை மீண்டும் அமலுக்கு வந்தால் சமூக ஆர்வலர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...