தமிழகம் டூ இலங்கை: யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக தரையிறங்கிய இந்திய விமானம்

தண்ணீர் பீச்சி வரவேற்கப்பட்ட முதல் விமானம்

 • Last Updated :
 • Share this:
  36 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னையில் இருந்து சென்ற முதல்விமானம் இன்று தரையிறங்கியது.

  இலங்கையில் 1983ல் உள்நாட்டுப்போர் காரணமாக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பலாலி விமான தளத்திற்கு விமான சேவை நிறுத்தப்பட்டது. 2009ல் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபின்னர் விமான தளத்தை விமான நிலையமாக புனரமைக்கும் பணிகள் இந்திய அரசின் உதவியுடன் நடைபெற்றன.  பலாலி விமான தளம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், விமான நிலையம் 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. அத்துடன், தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இன்று விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.  இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் புரணமைக்கப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்தனர்.  சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு ஏர் இந்தியாவின் அலைன்ஸ்ஏர் விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. முதற்கட்டமாக மதுரை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.

   

  Published by:Sankar
  First published: