மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்? தேவாலயங்களில் பிரார்த்தனைகள் ரத்து

ஈஸ்டர் விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை திறக்கப்பட இருந்த கத்தோலிக்க பள்ளிகள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: May 3, 2019, 8:51 AM IST
மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்? தேவாலயங்களில் பிரார்த்தனைகள் ரத்து
ஈஸ்டர் விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை திறக்கப்பட இருந்த கத்தோலிக்க பள்ளிகள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Web Desk | news18
Updated: May 3, 2019, 8:51 AM IST
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தேவாலயங்களில் நாளை மறுதினம் நடைபெறுவதாக இருந்த பிரார்த்தனை ரத்துசெய்யப்பட்டுள்ளது. 2 இடங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் நாளன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்துக்கு இடமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், தேவாலயங்களில் நாளை மறுதினம் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும் என்று கொழும்பு ஆர்ச்பிஷப் மால்கோம் ரஞ்சித் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆர்ச்பிஷப் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் பிரபலமான தேவாலயம் மற்றும் கத்தோலிக்க கல்வி நிறுவனம் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வெளிநாடுகளிலிருந்து தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே, தேவாலயங்களில் நாளை மறுதினம் நடத்தப்பட இருந்த பிரார்த்தனை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும், ஈஸ்டர் விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை திறக்கப்பட இருந்த கத்தோலிக்க பள்ளிகள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றும் மால்கோம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Also see...  இலங்கைத் தாக்குதல்: தீவிரவாதிகள் 9 பேரின் புகைப்படங்கள் 
Loading...


Also see... VIDEO | இலங்கை குண்டு வெடிப்பு - முதுகில் பையுடன் தேவாலயத்தின் உள்ளே நுழையும் தீவிரவாதிகள்


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...