இலங்கையில் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை - அதிபர் சிறிசேனா

நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்று அதிபர் சிறிசேனா வலியுறுத்தியுள்ளார்.

Web Desk | news18
Updated: April 26, 2019, 8:15 AM IST
இலங்கையில் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை - அதிபர் சிறிசேனா
இலங்கை அதிபர் சிறிசேனா
Web Desk | news18
Updated: April 26, 2019, 8:15 AM IST
இலங்கையில் பாதுகாப்புப் படைகளை மறுகட்டமைப்பு செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக அதிபர் சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார்.

ஈஸ்டர் தினத்தில் குண்டு வெடித்த பிறகு இலங்கையில், தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடந்தேறி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் அதிபர் சிறிசேனா நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், மக்களை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பச் செய்யவும், அமைதியான முறையில் மக்கள் வாழ்வதை உறுதிப்படுத்தவும், பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.

மேலும் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

அத்துடன் உளவுத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் படைகளையும் மறுகட்டமைப்பு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கி உள்ளதாகவும் அதற்கான பணிகள் விரைந்து நடப்பதாகவும் இலங்கை அதிபர் சிறிசேனா கூறினார்.

Also see... இலங்கைத் தாக்குதல்: தீவிரவாதிகள் 9 பேரின் புகைப்படங்கள்
Loading...
Also see...  இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359-ஆக உயர்ந்துள்ளது.


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...