இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கலைத்தது செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரணில் விக்ரம சிங்கேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி அக்டோபர் மாதம் 26ம் தேதி அதிபர் சிறிசேன உத்தரவிட்டார். தொடர்ந்து, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்த அவர், நாடாளுமன்றத்தை முடக்கி அறிவிப்பு வெளியிட்டார்.
பின்னர், நவம்பர் 9-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார். அவருடயை இந்த முடிவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ’அதிபர் சிறிசேனா, நாடாளுமன்றத்தைக் கலைத்தது சட்ட விரோதச் செயல். எனவே, நாடாளுமன்றத்தைக் கலைத்தது செல்லாது’ என்று உத்தரவிட்டது.
ஏற்கெனவே, ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 117 உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்தது. சிறிசேனாவுக்கு எதிரான உச்ச நீதிமன்ற உத்தரவும், நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கே பெரும்பான்மையை நிருபித்ததும் அதிபர் சிறிசேனாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.