தமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி?

Srilanka President Gotabaya Rajapaksa | திரிகோணமலை பகுதியில் ஒன்றரை லட்சத்துக்கு அதிகமான வாக்குகளை சஜித் பிரேமதாசவும், 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை ராஜபக்சவும் பெற்றுள்ளனர்.

தமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி?
கோத்தபய ராஜபக்ச
  • Share this:
இலங்கை அதிபர் தேர்தலில் சிங்கள மக்கள் கோத்தபய ராஜபக்சவுக்கு ஆதரவாகவும், தமிழ் மக்கள் அவருக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகள் பெற்று, புதிய அதிபராக பதவியேற்க உள்ளார்.  எனினும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் கோத்தபயவை புறக்கணித்து, சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்துள்ளனர்.

இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்ற போது அந்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலாளராக இருந்தவர் கோத்தபய. அவரே அதிகளவில் தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தவர் என தமிழர்களால் குற்றம்சாட்டப்படுகிறது. அவருக்கு கடுமையான எதிர்ப்பு இருந்த நிலையில், அதிகளவிலான தமிழர்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்துள்ளனர்.


இறுதிப்போர் நடைபெற்ற வன்னி மாவட்டத்தில் சஜித் பிரேமதாச ஒன்றே முக்கால் லட்சம் வாக்குகளைப் பெற்ற நிலையில், கோத்தபய 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சஜித் பிரேமதாச மூன்றேகால் லட்சம் வரையிலான வாக்குகளையும், கோத்தபய 23ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர்.

திரிகோணமலை பகுதியில் ஒன்றரை லட்சத்துக்கு அதிகமான வாக்குகளை சஜித் பிரேமதாசவும், 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை ராஜபக்சவும் பெற்றுள்ளனர். மட்டக்களப்பில் பிரேமதாச சுமார் இரண்டரை லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார். கோத்தபய மட்டக்களப்பில் 35ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

முஸ்லீம்கள் அதிக அளவில் வாழும் கிழக்கு மாகாணத்திலும் பிரேமதாச அதிக அளவிலான வாக்குகளை பெற்றுள்ளார். அதேநேரத்தில் வடக்கு மாகாணத்தில் கோத்தபய 50 ஆயிரம் வாக்குகள் வரை பெற்றுள்ளார்.  பெரும்பாலான தமிழ் மக்கள் கோத்தபயவை புறக்கணித்துள்ள நிலையில், வடமாகாணத்தில் 18 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை அவர் பெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
First published: November 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading