இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு: உலக நாடுகள் கண்டனம்

கொழும்பு தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டெரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: April 22, 2019, 9:17 AM IST
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு: உலக நாடுகள் கண்டனம்
இலங்கை - குண்டு வெடிப்பு
Web Desk | news18
Updated: April 22, 2019, 9:17 AM IST
இலங்கை குண்டுவெடிப்புக்கு ஐ.நா. உட்பட அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பயங்கவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இலங்கை மக்களின் துயரத்தில் பங்கெடுப்பதுடன், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்ற குரலும் வலுத்துள்ளது.

இதன் ஒருபகுதியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டெரஸ், கிறிஸ்தவர்களின் புனித நாளான ஈஸ்டர் தினத்தன்று, கொடிய தாக்குதல் நிகழ்த்தப்பட்டது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உறுதுணையாக ஐ.நா இருக்கும் எனவும், பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Loading...பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக, அமெரிக்க மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்த டவிட்டர் பதிவில், முதலில் உயிரிழந்தவர்கள் 138 பேர் என்பதற்கு பதில், 138 மில்லியன் என தவறாக சுட்டிக்காட்டியதால் இணையதளத்தில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.கொழும்பு தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு இந்த பிராந்தியத்தில் இடமில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், பயங்கரவாதத்துககு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட உலக தலைவர்களும், தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also see... இலங்கையில் தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டு வெடிப்பு


Also see... இலங்கை தொடர் குண்டு வெடிப்பு விவகாரத்தில் திருப்பம்!


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...