இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது

கடந்த 10 நாட்களுக்கு முன்பே கொழும்புவில் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Web Desk | news18
Updated: April 22, 2019, 9:07 AM IST
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது
இலங்கை குண்டு வெடிப்பு
Web Desk | news18
Updated: April 22, 2019, 9:07 AM IST
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 24 பேரை கைது செய்து அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தாக்குதலுக்கு மதவாத சக்திகளே காரணம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள், புலனாய்வு அமைப்பினர், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் கொழும்புவில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒரு வீட்டில் பதுங்கியிருந்த போது இவர்களை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். அத்துடன், வெடிகுண்டுகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தியதாக கூறி, சிறிய வேன் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களில், 10 பேரை புலனாய்வு அமைப்பிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். இதை தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தாக்குதலுக்கு மதவாத சக்திகளுக்கு தொடர்பு இருக்கலாம் என இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

கொழும்பு குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில், தாக்குதல் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டறியும் வகையில், விசாரணைக் குழு ஒன்றை, அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இக்குழு, இரண்டு வாரங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது-

Loading...

மேலும், நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பே கொழும்புவில் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொடூர தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Also see... இந்தியா மீண்டும் எங்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளது: பாகிஸ்தான்


Also see... இலங்கையில் தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டு வெடிப்பு


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...