இலங்கை: ’ரத்த தானம் செய்யுங்கள்...’ ஃபேஸ்புக் பதிவால் உதவிக்குக் குவிந்த மக்கள்!

தொடர்ந்து ஆறு குண்டுவெடிப்புச் சம்பவங்களால் படுகாயமடைந்த மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவமனைகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின.

Web Desk | news18
Updated: April 22, 2019, 2:46 PM IST
இலங்கை: ’ரத்த தானம் செய்யுங்கள்...’ ஃபேஸ்புக் பதிவால் உதவிக்குக் குவிந்த மக்கள்!
(படம்- ட்விட்டர்)
Web Desk | news18
Updated: April 22, 2019, 2:46 PM IST
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களால் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோருக்கு ரத்தம் தேவைப்பட்டதால் ரத்த வங்கி ஒன்றின் ஃபேஸ்புக் பதிவால் நூற்றுக்கணக்கானோர் ரத்த தானம் செய்ய உடனடியாக முன்வந்தனர்.

ஈஸ்டர் பண்டிகை தினமான நேற்று இலங்கையில் நடந்தத் தொடர் குண்டு வெடிப்பு சம்வங்களால் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம்டைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சுமார் 9 பேர் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து எட்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களால் படுகாயமடைந்த மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவமனைகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின. போதிய இடவசதியின்மை, ரத்தப் பற்றாக்குறை எனப் பிரச்னைகள் இருந்தன.


இதனால், இலங்கை தேசிய ரத்த தான சேவை மையம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் படுகாயமடைந்து சிகிச்சையில் இருப்போருக்கு ரத்தம் தேவைப்படுவதாகவும் விருப்பம் உள்ளவர்கள் தானம் வழங்கலாம் என அறிவித்திருந்தது.

இந்தப் பதிவு ஃபேஸ்புக்கில் வைரலாக உடனடியாக மக்கள் கூட்டம் கூட்டமாக ரத்த வங்கியில் ரத்தம் தானம் செய்ய முன்வந்தனர். மக்களின் ஒற்றுமை குறித்தப் பதிவுகள் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகின்றன.

மேலும் பார்க்க: இலங்கை தொடர் குண்டு வெடிப்பு விவகாரத்தில் திருப்பம்!

Loading...

First published: April 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...