பத்து நாள்களுக்கு முன்பே விடுக்கப்பட்ட எச்சரிக்கை! அலட்சியமாக இருந்துவிட்டதா இலங்கை

தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறலாம் என்று இலங்கையின் மூத்த காவல்துறை அதிகாரி பத்து நாள்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

news18
Updated: April 22, 2019, 12:11 AM IST
பத்து நாள்களுக்கு முன்பே விடுக்கப்பட்ட எச்சரிக்கை! அலட்சியமாக இருந்துவிட்டதா இலங்கை
இலங்கை குண்டு வெடிப்பு
news18
Updated: April 22, 2019, 12:11 AM IST
இலங்கையிலுள்ள முக்கிய சர்ச்சுகளில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று 10 நாள்களுக்கு முன்பாகவே அந்நாட்டின் மூத்த காவல்துறை அதிகாரி எச்சரிக்கைவிடுத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் கொழும்பு பகுதியிலுள்ள முக்கிய சர்ச்களில் இன்று காலையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. காலையில் தொடர்ச்சியாக ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. பின்னர், மதியம் 2 மணி அளவிலும், 3 மணி அளவிலும் மேலும் இரண்டு குண்டு வெடிப்புகள் நடைபெற்றன.

இந்த குண்டு வெடிப்புகளில் 215 பேர் வரை உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறலாம் என்று இலங்கையின் மூத்த காவல்துறை அதிகாரி பத்து நாள்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


இலங்கையின் மூத்த காவல் அதிகாரி புஜுத் ஜெயசுந்தரா, ஏப்ரல் 11-ம் தேதி ஒரு அறிக்கை அளித்துள்ளார். அதில், தேசிய தவ்ஜூத் ஜமாத் (National Thowheeth Jama'ath) என்ற அமைப்பு, நாட்டிலுள்ள முக்கிய சர்ச்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்’ என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த எச்சரிக்கையையும் மீறி இன்று தாக்குதல் நடைபெற்றுள்ளது.

Also see:

Loading...

First published: April 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...