இலங்கையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல்

இலங்கையில் கொரோனா தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல்
கோத்தபய ராஜபக்ச
  • Share this:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி கலைத்திருந்தார். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் நடைபெற்ற நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும் புதிய சுகாதார விதிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க...

குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா இரண்டு முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும்: தமிழக அரசு


First published: June 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading