இலங்கை குண்டுவெடிப்பு: 6 இந்தியர்கள் உட்பட 290 பேர் உயிரிழப்பு

இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அங்குள்ள தூதரக அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை குண்டுவெடிப்பு: 6 இந்தியர்கள் உட்பட 290 பேர் உயிரிழப்பு
இலங்கை
  • Share this:
இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சிக்கி இதுவரை 6 இந்தியர்கள் உட்பட 290 பேர் உயிழந்துள்ளனர். உலகையே உலுக்கிய இந்த கோர சம்பவத்தால் இலங்கை மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து உயிர்ந்தெழுந்த நாளாக கருதப்படும் அந்நாளில் கிறிஸ்தவர்கள் அனைவரும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். இதன் ஒருபகுதியாக இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது காலை, 9 மணியளவில் கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நெகோம்போவில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்கிளப்பில் இவாஞ்சலின் தேவலாலயம் ஆகிய 3 தேவாலயங்களிலும் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், பலர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும், கொழும்புவில் உள்ள ஷங்ரி லா, சின்ன மோன் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 நட்சத்திர விடுதிகளிலும் அடுத்துடுத்து வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கியிருக்கும் ஓட்டல்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நிகழ்த்திய இந்த தாக்குதல் செய்தியால் உலகமே அதிர்ச்சியடைந்தது.


கொழும்பு நகரமே மரண ஓலத்தில் கதி கலங்கி நின்றிருந்து நிலையில், பிற்பகல் 2 மணியளவில் மேலும், தெகிவாலாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் மற்றும் டெமாட்டாகொடா பகுதியில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அடுத்தடுத்த தாக்குதலால், கொழும்புவில் நிலவிய அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில், தொடர்புடையவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை விதிக்க வேண்டும் என்று கொழும்பு பேராயர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரே நாளில் 3 தேவாலயங்கள், 4 ஒட்டல்கள் உட்பட 8 இடங்களில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் இதுவரை  வெளிநாட்டினர் உட்பட குழந்தைகள், பெண்கள் உட்பட 290 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதில், இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அங்குள்ள தூதரக அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலில், 8-வது இடத்தில் நிகழ்த்தப்பட்டது மனிதவெடிகுண்டு தாக்குதல் என்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
First published: April 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading