இந்தியாவில் படிப்பு; அமெரிக்கக் குடியுரிமை; சீனாவுடன் நெருக்கம்! யார் இந்த கோத்தபய ராஜபக்ச?

விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிப்போரை நிகழ்த்தியதில் முக்கிய பங்காற்றியவர் கோத்தபய ராஜபக்ச. 

இந்தியாவில் படிப்பு; அமெரிக்கக் குடியுரிமை; சீனாவுடன் நெருக்கம்! யார் இந்த கோத்தபய ராஜபக்ச?
கோத்தபய ராஜபக்ச
  • Share this:
இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த கோத்தபய ராஜபக்ச

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, 2005-ஆம் ஆண்டு முதல் 2014 வரை மகிந்த ராஜபக்சவின் அரசில் பாதுகாப்புத்துறைச் செயலாளராக பணியாற்றியவர்.


1980-ஆம் ஆண்டு அசாமில் பாதுகாப்புத்துறை தொடர்பான பட்டப்படிப்பையும், 1983ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புத்துறை தொடர்பான முதுகலை பட்டத்தையும் கோத்தபய ராஜபக்ச பெற்றார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரை நிகழ்த்தியதில் முக்கிய பங்காற்றியவர் கோத்தபய ராஜபக்ச.

அமெரிக்கா குடியுரிமை பெற்றிருந்த கோத்தபய, அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதனை துறந்தார்.அதேநேரத்தில் சீனாவுக்கு மிக நெருக்கமானவராகவும் கோத்தபய ராஜபக்ச அறியப்படுகிறார். பலமுறை சீன பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆனால் இந்தியாவுடன் கோத்தபயவுக்கு பெரிய அளவில் நெருக்கம் கிடையாது.

70 வயதான கோத்தபய ராஜபக்ச பெற்றுள்ள வெற்றி, இலங்கை அரசியலின் முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: November 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்