இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பிரதமர் ரணில் விளக்கம்

இலங்கை தாக்குதலுக்கு முக்கிய காரணமாக நியூசிலாந்து கிறிஸ்ட் சர்ச் மீதான தாக்குதலும் ஒன்றாக இருக்கலாம் என்று ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

Web Desk | news18
Updated: April 24, 2019, 7:44 AM IST
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பிரதமர் ரணில் விளக்கம்
ரணில் விக்கரமசிங்கே
Web Desk | news18
Updated: April 24, 2019, 7:44 AM IST
இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் சிலர் தப்பியோடிவிட்டதாகவும், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை கண்டறிவதில் விசாரணை அமைப்புகள் முன்னேற்றம் கண்டிருப்பதாகவும், தாக்குதலுக்கு காரணமான அமைப்புகளையும் கண்டறிய விசாரணை அமைப்புகளுக்கு அவகாசம் தேவை என்றும் அவர் கூறினார்.


மேலும் இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கெய்ரோ-விலிருந்து செய்தி வந்துள்ளது. இதற்கு முன்னதாக வெளிநாட்டு தொடர்பு இருப்பதாக கருதப்பட்டது.

இதனை நாம் இதுவரை கண்டிராத வகையில் பயிற்சி பெற்று, ஒருங்கிணைத்துதான் நடத்தியிருக்க முடியும். பல்வேறு நாடுகளும் எங்களுக்கு உதவ முன்வந்துள்ளன. முதலாவதாக அமெரிக்காவும், பின்னர் மற்ற நாடுகளும் வர உள்ளன. அவர்களுடன் ஒருங்கிணைந்து விசாரணை நடத்துவது குறித்து போலீஸார் முடிவுசெய்ய உள்ளனர் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் சிலர் தப்பிவிட்டதாகவும், வெடிகுண்டுகளுடன் சுற்றித்திரியும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Loading...

எத்தனை நபர்கள் தப்பிவிட்டனர்? எவ்வளவு பேர் இருப்பார்கள் என கணிக்கிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்தவர், இல்லை. எனக்கு தெரியாது என்று கூறினார்.

அப்படியென்றால் வெளியே அதிகளவில் வெடிபொருட்கள் இருக்கும் என நம்புகிறீர்களா? என்று கேட்ட கேள்விக்கு, நான் அப்படி சொல்லவில்லை. குண்டுகளை வெடிக்க வைப்பதற்குள் அவர்களை பிடித்தாக வேண்டும். அப்போது தான் நமக்கு முழு வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.

மேலும் தப்பியோடியவர்களை கைதுசெய்ய முயற்சிக்கிறோம். அவர்களில் பலரை கைது செய்துள்ளோம் என்றார்.

நியூசிலாந்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும், இதுகுறித்து விசாரணை நடத்திவரும் போலீஸார் தான் தெரிவிக்க முடியும் என்றும் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக கிறிஸ்ட் சர்ச் (நியூசிலாந்து) மீதான தாக்குதலும் ஒன்றாக இருக்கலாம். ஆனால், அதனை இங்கு கூற முடியாது என்றார்.

இலங்கையை சேர்ந்த 32 இஸ்லாமியர்கள் சிரியாவிற்கு சென்று ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக உங்களது அரசாங்கம் கூறுகிறது. அவர்கள் நாடு (இலங்கைக்கு) திரும்பிவிட்டதாக நினைக்கிறீர்களா? அவர்களுக்கு இந்த தாக்குதலில் தொடர்பு இருக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, சில நபர்கள் (நாடு) திரும்பிவிட்டனர். சிலர் அங்கேயே கொல்லப்பட்டு விட்டனர். நாடு திரும்பியவர்களை உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இந்திய தூதரகத்தின் மீதும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகக் கூறிய ரணில் விக்ரமசிங்கே, தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் அமைதிகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Also see... இலங்கையில் துக்க தினம் அனுசரிப்பு - கண்ணீர்மல்க அஞ்சலி 

Also see... இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு


Also see... 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...