பிரதமர் மோடியை வரவேற்க்கக் காத்திருக்கிறோம் - இலங்கை அதிபர்

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, முதல் அரசுமுறைப்பயணமாக மாலத்தீவு செல்ல இருக்கிறார்.

Web Desk | news18
Updated: June 1, 2019, 12:43 PM IST
பிரதமர் மோடியை வரவேற்க்கக் காத்திருக்கிறோம் - இலங்கை அதிபர்
மைத்ரிபால சிறிசேனா (AP/PTI)
Web Desk | news18
Updated: June 1, 2019, 12:43 PM IST
’பிரதமர் மோடி இலங்கைக்கு வரவேற்க காத்திருக்கிறோம்’ என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கை தேர்தல் குறித்த அறிவிப்புக்காக செய்தியாளர்களை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “வலி மிகுந்த தாக்குதல்களிலிருந்து இலங்கை மீண்டு வந்துள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 9-ம் தேதி இலங்கை பொதுத்தேர்தல் நடைபெறும். எந்தவொரு கட்சியும் இன்னும் தங்களது வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. அதனால் நானும் அவசரப்படவில்லை” எனக் கூறினார்.


மேலும் அவர் மோடி குறித்து கூறுகையில், “பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்துக்காக நாங்கள் காத்திருக்கிறோம். வருகிற ஜூன் 9-ம் தேதி பிரதமர் மோடி இலங்கைக்கு வருகிறார். அவரை வரவேற்க காத்திருக்கிறோம்.

பிரதமர் மோடி இரண்டாம் முறையாகப் பதவி ஏற்றபின் இரண்டாவது வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக இலங்கைப் பயணம் இருக்கும்” என்றார்.

மேலும் பார்க்க: அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் தோற்ற அதிகாரிகளை கொலை செய்த வடகொரியா?

Loading...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...