இலங்கையில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

 • Last Updated :
 • Share this:
  225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

  இதில், 7,452 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 12,985 வாக்குச்சாவடிகளில் மக்கள் முகக்கவசம் அணிந்து சென்று வாக்களித்தனர். இதில், 71 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையத் தலைவர் மகிந்தா தேசப்பிரியா தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக நுவாரா எலியாவில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின.

  தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வழக்கமாக வாக்குப்பதிவு தினத்தன்று, இரவு 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், கொரோனா தொற்று காரணமாக, இன்று காலை 7 மணிக்குதான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

  Also read... ஒரே ஆண்டில் 212 சூழலியல் ஆர்வலர்கள் படுகொலை - குளோபல் விட்னஸ் அமைப்பு அறிக்கை

  இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியும், ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியும், சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் தேசிய கட்சியும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர்.  மூவரில் வெல்லப்போவது யார் என்பதை பொறுத்து, இலங்கை அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நிகழும் என எதிர்பார்க்கலாம்.
  Published by:Vinothini Aandisamy
  First published: