• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இலங்கையில் அரசியல் குழப்பம் - ரணில் பிரதமராக நீடிப்பதாக சபாநாயகர் அறிவிப்பு

இலங்கையில் அரசியல் குழப்பம் - ரணில் பிரதமராக நீடிப்பதாக சபாநாயகர் அறிவிப்பு

ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்க

இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பொறுப்பேற்கவில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆன நிலையில், ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நீடிக்கிறார் என்று பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா அங்கீகாரம் அளித்துள்ளார்.

    இலங்கையில் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் மைத்திபால சிறீசேனா அதிபராக இருந்து வருகிறார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணியில் இருந்து சுதந்திரா கட்சி விலகியது.

    பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே


    முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்த திடீர் அரசியல் மாற்றம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் சாசனப்படி தானே பிரதமர் என ரணில் விக்கிரமசிங்கே பேட்டியளித்தார். ரணில் தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாகவும், ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும் என அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது.

    ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பிரதமர் இல்லத்தை விரைவில் காலி செய்ய வேண்டும் என அதிபர் தரப்பில் இருந்து நெருக்கடி தரப்பட்டது. இதனால், அந்நாட்டில் அரசியல் குழப்பம் நிலவியது.

    இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூரியா


    அதிபர் சிறிசேனாவுக்கு பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று எழுதியுள்ள கடித்தத்தில், “ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்கிரமசிங்கேவின் அதிகாரங்கள், சிறப்பு உரிமைகள் தொடரும். அவர் பிரதமராக நீடிப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் செய்திகள்..

    சீர்திருத்தப்பள்ளியில் இருந்து ஜாமினில் வந்த சிறுவன் வெட்டிக்கொலை

    மனைவியை கொன்று காதலிக்கு “காதலர்தின பரிசு” அளித்த ஆசாமி கைது

    Also See..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: