அதிபரிடம் மறைத்துவிட்டதா பாதுகாப்பு கவுன்சில்? இலங்கை அமைச்சர் காட்டம்

குண்டு வெடிப்பு தொடர்பாக இந்திய உளவுத்துறை அளித்த தகவல்களை உளவுத்துறை அமைப்பின் உயர் அதிகாரிகள் வேண்டுமென்ற மறைத்துள்ளனர்.

அதிபரிடம் மறைத்துவிட்டதா பாதுகாப்பு கவுன்சில்? இலங்கை அமைச்சர் காட்டம்
இலங்கையில் குண்டு வெடிப்பு நடந்த தேவாலயம்
  • News18
  • Last Updated: April 24, 2019, 5:32 PM IST
  • Share this:
பாதுகாப்பு அமைப்புகள் வேண்டுமென்றே குண்டு வெடிப்பு தொடர்பாக வந்த எச்சரிக்கை குறித்த தகவல்களை மறைத்துள்ளனர் என்று இலங்கை அமைச்சர் லக்ஷ்மான் கிரியெல்லா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குண்டு வெடிப்பு நடக்கவுள்ளது என்று இந்திய உளவுத்துறை எச்சரிக்கை அளித்த பிறகும், இலங்கை அரசு அலட்சியமாக இருந்தது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.


இந்தநிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய இலங்கை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லா, ‘குண்டு வெடிப்பு தொடர்பாக இந்திய உளவுத்துறை அளித்த தகவல்களை உளவுத்துறை அமைப்பின் உயர் அதிகாரிகள் வேண்டுமென்ற மறைத்துள்ளனர். அவர்களிடம் தகவல்கள் இருந்துள்ளன. ஆனால், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். ஏப்ரல் 4-ம் தேதியே தேவாலயங்கள், ஹோட்டல்களில் தாக்குதல் நடைபெறும் என்று இந்திய உளவுத்துறையிடமிருந்து தகவல்கள் வந்துள்ளன.

பின்னர், ஏப்ரல் 7-ம் தேதி அதிபர் மைத்திரிபால சிறிசேனா தலைமையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால், அந்தக் கூட்டத்தில் இந்தத் தகவல் குறித்து பேசப்படவில்லை. உளவுத்துறையின் உயர் அதிகாரிகளை யாரோ கட்டுப்படுத்துகின்றனர். பாதுகாப்பு கவுன்சில் அரசியல் செய்கிறது. இதுகுறித்து நாம் விசாரணை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய முன்னாள் ராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா, ‘இந்த குண்டு வெடிப்புக்கு 7-8 ஆண்டு காலம் திட்டமிட்டிருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.Also see:

First published: April 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading