இலங்கை தொடர் குண்டு வெடிப்பு விவகாரத்தில் திருப்பம்! ஏழுபேர் கைது

அதனைத் தொடரந்து மதியம் 2 மணி அளவில், இலங்கையின் டெகிவாலா உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடித்தது.

news18
Updated: April 21, 2019, 5:36 PM IST
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு விவகாரத்தில் திருப்பம்! ஏழுபேர் கைது
இலங்கை
news18
Updated: April 21, 2019, 5:36 PM IST
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ரூவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்று காலையில் தொடர்ச்சியாக 6 இடங்களில் குண்டுகள் வெடித்தது. அதனைத் தொடரந்து மதியம் 2 மணி அளவில், இலங்கையின் டெகிவாலா உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடித்தது.

’தீவிரவாதத்தை விட்டு நீண்ட தொலைவுக்கு வந்துவிட்டோம்’ - இலங்கையிலிருந்து எழும் குரல்கள்


இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 3 மணி அளவில் கொழும்பு தெமடகொட பகுதியில் இலங்கை வீட்டு வசதி வாரியம் அமைந்துள்ள பகுதியில் குண்டு வெடித்தது. இந்த தொடர் குண்டு வெடிப்புகள் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்த்தனா, ‘இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரையில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெகிவாலா உயிரியல் பூங்கா அருகேயுள்ள நட்சத்திர ஹோட்டலில் குண்டு வெடிப்பு நடந்த பிறகு, அங்கே சென்ற தேசிய புலனாய்வு அதிகாரிகள், அங்கிருந்து சந்தேக நபர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர், அளித்த தகவலின் அடிப்படையில் மீதமுள்ள நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றுதெரிவித்தார்.

Also see:

Loading...

First published: April 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...