• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்கும் இலங்கை.. எதுக்கு தெரியுமா?

இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்கும் இலங்கை.. எதுக்கு தெரியுமா?

India srilanka

India srilanka

இந்திய - இலங்கை பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 500 மில்லியன் டாலர்கள் இந்தியாவிடம் இருந்து கடன் பெற இருப்பதாக தெரிவித்தார்.

  • Share this:
500 மில்லியன் டாலர் கடனுக்காக இலங்கை அரசு இந்தியாவின் உதவியை நாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கடனின் மூலம் இலங்கை அரசு அதனுடைய எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

பெட்ரோலை அடுத்து டீசலின் விலையும் 100 ரூபாயை கடந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையேற்றம் என்பது இந்தியாவில் மட்டும் நிலவும் பிரச்னையாக இல்லாமல் உலகளாவிய பிரச்னையாகவும் உருவெடுத்திருக்கிறது. நம் அண்டை நாடான இலங்கை எரிபொருள் விலையேற்றத்தால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

சமீபத்தில் இலங்கையின் எரிசக்தித்துறை அமைச்சர் உதயா கம்மன்பிலா செய்தியாளர்களிடையே பேசும்போது, பொருளாதார அடிப்படையின் இலங்கையின் எரிசக்தி கையிருப்பு வரும் ஜனவரி மாதம் வரையில் மட்டுமே கிடைக்கும் என எச்சரித்தார்.

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதால் இலங்கை அரசு எரிபொருள் இறக்குமதிக்கு செலவிடும் தொகை இந்த ஆண்டு மட்டும் 41.5 சதவீதம் கூடுதலாகி இருக்கிறது. மேலும் மணி எக்ஸ்சேஞ்ச் மதிப்பும் குறைந்துள்ளதால் இந்த சுமை மேலும் அதிகரித்துள்ளது.

Also Read: டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட சீன நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்.. நட்பில் விரிசல்?

இதனிடையே இலங்கையின் எரிபொருள் செலவை சமாளிக்க இலங்கை அரசு இந்தியாவிடம் கடன் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. சிலோன் பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க கூறுகையில், இந்திய - இலங்கை பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 500 மில்லியன் டாலர்கள் இந்தியாவிடம் இருந்து கடன் பெற இருப்பதாகவும், இதற்காக இந்திய தூதரக அலுவலக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Also Read:  மது போதையில் பைப்பை பிடித்து ஏறிய கல்லூரி மாணவர்.. 8வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்!

மேலும் இரு நாடுகளுக்கிடையேயும் இது தொடர்பான ஒரு கடன் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் அவர் தெரிவித்திருப்பதாக இலங்கை உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசின் பெட்ரோலிய நிறுவனமான, சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இலங்கையின் முக்கிய இரு வங்கிகளான சிலோன் வங்கி மற்றும் பீபிள்ஸ் வங்கிகளுக்கு 3.3 பில்லியன் டாலர்கள் கடன் வைத்திருக்கிறது. இலங்கை அரசு தனது எரிபொருள் இறக்குமதியை, குறிப்பாக கச்சா எண்ணெய்யை மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்தும், சுத்தீகரிக்கப்பட்ட எரிபொருள் பொருட்களை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: