ஒரே நாளில் இயற்கை விவசாயத்துக்குத் தாவல்: இலங்கைக்கு சவால் அளிக்கும் உணவுப்பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்

கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் அன்னியச் செலாவணி கையிருப்பு கடும் சரிவு, இலங்கை ரூபாய் மதிப்பு கடும் சரிவு அதனால் அதிகரித்த உணவுப்பணவீக்கம் ஆகியவற்றினால் இலங்கையில் கடும் உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகள் சிவில் யுத்தம் நடந்த போது கூட இத்தகைய நிலையை இலங்கை எட்டியதில்லை. பின் எப்படி இப்போது சிக்கியது? காரணம் இதுதான்:

 • Share this:
  இலங்கையின் உணவுப்பஞ்சத்துக்குக் காரணம் அங்கு ஆளும் ராஜபக்ச அரசின் மிகத் தவறான ஒருமுடிவே. ஏப்ரல் 29ம் தேதி ரசாயன உரங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியைத் தடை செய்தது. ஒரே இரவில் இப்படிச் செய்து இயற்கை விவசாயத்துக்கு மாற வலியுறுத்தப்பட்டது, ஆனால் இந்த மாற்றம் அவ்வளவு எளிதானதும் அல்ல, உடனே பலனளிக்கக் கூடியதும் அல்ல.

  இதனால் ஆய பயன் என்னவெனில், வெங்காயம், சர்க்கரை, அரிசி விலை இருமடங்குக்கும் மேல் கிடுகிடுவென உயர்ந்தது. சர்க்கரை விலை வானளாவ சென்று கிலோ ரூ.200க்கும் கூட விற்கப்பட்டது. கெரசின், எண்ணெய் மற்றும் சமையல் எரிவாய் விலைகள் கடுமையாக உயர்ந்தன. தேயிலை பயிர் அக்டோபரில் தோல்வி காண்பது அங்கு இயல்புதான். ஏலக்காய், மிளகு, ரப்பர், லவங்கப்பட்டை வெற்றிலை, கோகோ, வெனிலா போன்றவற்றின் விலைகளும் கடுமையாக உயர்ந்தன.

  இலங்கையின் அன்னியச் செலாவணி 62% சரிந்து 2.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பும் 7% வரை சரிவு கண்டது. இதற்குக் காரணமாக இலங்கை அரசு கூறியது என்னவெனில், கோவிட் காரணமாக வீழ்ந்து போன சுற்றுலாத்துறை. உணவுப்பொருட்கள் பதுக்கல் ஆகியவையாகும். அங்கு டாலரை நேரடியாக சந்தைகளில் பரிமாற்றிக் கொள்ள முடியும் என்பதால் சுற்றுலா அடி வாங்கியது அன்னியச் செலாவணி அடிவாங்கியதில் முடிந்தது.

  ஒரே நாள் இரவில் ஆர்கானிக் பார்மிங், அதாவது இயற்கை விவசாயத்துக்குத் தாவியதுதான் பெரிய பிரச்னை என்கிறார் இலங்கை தேயிலை எஸ்டேட் வல்லுநர் ஹெர்மன் குணரத்னே இந்த நகர்வு தேயிலைத் தொழிலையே சிதைத்து விட்டது என்கிறார். 50% பயிரை இழப்போம். ஆனால் 50% கூடுதல் விலை கிடைக்கப் போவதில்லை. இலங்கையின் ஆண்டு தேயிலை உற்பத்தி சராசரியாக 300 மில்லியன் கிலோவாகும் இது பாதியாகக் குறைந்து விடும் என்கிறார் குணரத்னே.

  தேயிலைதான் இலங்கையின் ஒரே மிகப்பெரிய ஏற்றுமதி வர்த்தகம் ஆகும் இதன் மூலம் ஆண்டுக்கு 1.25 பில்லியன் டாலர்கள் வருவாய் கிடைக்கிறது. இது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாயில் 10% ஆகும். மேலும் இலங்கையில் விவசாயத்துக்கு 90% விவசாயிகள் இறக்குமதி ரசாயன உரங்களையே பயன்படுத்துகின்றனர், இப்படி திடீரென ஆர்கானிக் பார்மிங் என்றால் 85% உற்பத்தி பாதிக்கவே செய்யும் என்கின்றனர். இலங்கையில் 20% விவசாயிகளுக்குத்தான் முழுதும் இயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கான அறிவு உள்ளது.

  குறிப்பாக நெற்பயிர் 94% அயல்நாட்டு ரசாயன உரங்களை நம்பித்தான் பயிரிடப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக தேயிலை மற்றும் ரப்பர் 89% ரசாயன உரங்களை நம்பியுள்ளது. ஆர்கானிக் பார்மிங்குக்கு மாற வேண்டுமென்றால் இலங்கையிலேயே பெரிய அளவில் இயற்கை உரங்களை உற்பத்தி செய்ய வேண்டும் ஆனால் அங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் விஞ்ஞானிகள் எச்சரிப்பது என்னவெனில் இயற்கை விவசாயத்தில் விளைச்சல் குறையும் போது விவசாய நிலங்கள் அதிகரிக்கப்படும் இதனால் காடுகள் அழிக்கப்பட்டு சிலபல உயிரிகள் இல்லாமல் போகும், குளோபல் வார்மிங்கை அதிகரிக்கும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கின்றனர். மேலும் ரசாயன உரங்கள் இல்லை என்பதால் பூச்சிக்கொல்லிகளுக்காக இடுபொருள் செலவும் கடுமையாக அதிகரிக்கும். மேலும் கூடுதலாக புரோசசிங் மற்றும் மார்க்கெட்டிங் செலவுகளும் கடுமையாக அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

  இத்தகைய எச்சரிக்கைகளையும் உணவுப்பஞ்ச அபாயத்தையும் மீறி அதிபர் ராஜபக்ச ஐநா உச்சி மாநாட்டில், “இயற்கை விவசாய முயற்சி இலங்கை வாசிகளுக்கு மிகப்பெரிய அளவில் உணவுப்பாதுகாப்பையும் ஊட்டச்சத்தையும் உறுதி செய்யும்” என்று பேசியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: