• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இலங்கையில் தூக்கில் போடும் பணிக்கு குவிந்த விண்ணப்பங்கள்!

இலங்கையில் தூக்கில் போடும் பணிக்கு குவிந்த விண்ணப்பங்கள்!

கோப்புபடம்

கோப்புபடம்

இப்பணிக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தவர் பணி விலகிவிட்டதால் நிரந்தர ஊழியரை நியமிக்க அரசு முடிவெடுத்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இலங்கையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், அமெரிக்கர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    இலங்கையில் போதைப் பொருள் கடத்தல், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. வழக்கு விசாரணைகள் முடிந்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 48 பேர் சிறையில் உள்ளனர்.

    ஆனால், அவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில், அதற்கான பணியாளர் இல்லாததால் சிக்கல் ஏற்பட்டது.இப்பணிக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தவர் பணி விலகிவிட்டதால் நிரந்தர ஊழியரை நியமிக்க அரசு முடிவெடுத்தது.

    இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க கடைசி தேதி முடிந்த நிலையில், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் விண்ணப்பித்துள்ளார்.

    விண்ணப்பித்தவர்களை நேர்கானல் செய்து தகுதியானவரை தேர்வு செய்யும் வேலை நடந்து வருகிறது. 1976-ம் ஆண்டுக்கு பிறகு அங்கு இதுவரை யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: