• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இலங்கையில் ரணில் ஆதரவாளர்கள் பேரணி

இலங்கையில் ரணில் ஆதரவாளர்கள் பேரணி

ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்க

இலங்கை அதிபர் சிறிசேனாவிற்கும், பிரதமர் ரணில் விக்கிர சிங்கேற்விற்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல், அந்நாட்டு அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இலங்கையில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்.

இலங்கை அதிபர் சிறிசேனாவிற்கும், பிரதமர் ரணில் விக்கிர சிங்கேற்விற்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல், அந்நாட்டு அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய சிறிசேனா, அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பதவி பிரமாணம் செய்தார். அதிக அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன் பக்கம் இருப்பதாக கூறிய ரணில், பிரதமர் பதவியில் இருந்து வெளியேற முடியாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் கோரினார்.

ஆனால் இதற்கு இடமளிக்காத வகையில், நவம்பர் 16 வரை நாடாளுமன்றத்தையும் சிறிசேனா முடக்கி வைத்தார். இந்நிலையில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வலியுறுத்தியும், ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கொழும்பில் பேரணி சென்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

ரணில் விக்கிரமசிங்கே ஆதரவாளர்கள் இலங்கையில் நடந்த்திய பேரணி


பேரணியின்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய ரணில், ஜனநாயகத்திற்கு எதிராக அதிகாரத்தை சிறிசேனா கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார். இதனிடையே, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி தாவலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் துனேஷ் கங்கந்த, ராஜபட்சேவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள், சிறிசேனா பக்கம் சென்றுள்ளனர்.

சிறிசேனாவும், ரணிலும் நாடாளுமன்றத்தில் சம பலத்துடன் உள்ள நிலையில், 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, யாருக்கு ஆதரவு என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. 6 உறுப்பினர்களை கொண்ட மக்கள் விடுதலை முன்னனி, யாருக்கும் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: