• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்ச

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச

இலங்கையின் புதிய பிரதமராக திங்கட்கிழமை பதவியேற்க உள்ளதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, இலங்கை பிரதமர் ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அவர் அனுப்பி வைத்தார்.

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அக்டோபர் 26-ந் தேதி நீக்கிய அதிபர் சிறிசேன, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இது அரசியல் நெருக்கடிக்கு வழி வகுத்ததால் நாடாளுமன்றத்தை கலைத்து, உத்தரவிட்டார். ஆனால் இதை உச்சநீதிமன்றம் ரத்து செய்த போது, ராஜபக்ச தரப்பு மேல்முறையீட்டுக்குச் சென்றது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறிசேனாவின் ஆட்சிக் கலைப்பு நடவடிக்கை சட்ட விரோதமானது என அறிவித்தது. இதனையடுத்து புதன்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ரணில் விக்ரமசிங்கே வெற்றிபெற்ற போதும், அவரை பிரதமராக அறிவிக்க முடியாது என அதிபர் சிறிசேன தெரிவித்து விட்டார்.

ஆனால் இலங்கையின் புதிய பிரதமராக திங்கட் கிழமை பதவியேற்க உள்ளதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இந்த சூழலில் ராஜபக்ச கட்சியின் பொதுக்குழு கூட்டம், கொழும்புவில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அதிபர் சிறிசேனவை சந்தித்த ராஜபக்ச, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இது குறித்து அவரது மகன் நமல் ராஜபக்ச ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Also see... சென்னை ஐ.ஐ.டி கேண்டீனில் தீண்டாமை கடைப்பிடிப்பா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: