இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கொரோனாவோடு சேர்த்து மிக மோசமான நிதி நெருக்கடியுடன் போராடி வருகிறது. அங்கு பணியாற்றும் பொதுத்துறை ஊழியர்கள் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்கவும், உணவு பயிரிட அவர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாள் மட்டுமே வேலை என்ற திட்டத்திற்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இலங்கை, அதன் பொதுத் துறையில் சுமார் ஒரு மில்லியன் மக்களைப் பணியமர்த்தியுள்ளது. கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள், உணவு மற்றும் மருந்து ஆகியவற்றின் முக்கியமான இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறி வருகிறது..
எரிபொருள் இறக்குமதி இல்லாத காரணத்தால் நாட்டின் 22 மில்லியன் மக்களில் பலர் பெட்ரோல் நிலையங்களில் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. பல மாதங்களாக நீண்ட மின்வெட்டும் நீடித்து வருகிறது.
அதோடு உணவுப்பற்றாக்குறை பெரிய பிரச்சினையாக எழுந்து வருகிறது. இதனால் மக்களை தங்கள் வீட்டிற்கு பின்னால் உள்ள இடங்களில் சிறு அளவுகளில் விவசாயத்தை ஊக்குவிக்கும் எண்ணத்தை அரசு வெளியிட்டுள்ளது. அதற்காக பொதுத்துறை ஊழியர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அடுத்த மூன்று மாதங்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு இலங்கையின் அமைச்சரவை திங்கட்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
அன்றைய பணிக்கான பயணத்திற்கு பயன்படும் எரிபொருள் சேமிக்கப்படுவதோடு அந்த ஓய்வு நாள் விவசாயத்திற்கும் பயன்படும் என அரசு நம்புகிறது.
ஐக்கிய நாடுகள் சபை கடந்த வாரம் ஒரு மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு உதவ 47 மில்லியன் டாலர்களை வழங்க திட்டமிட்டுள்ளது.
அந்த நாட்டின் பணவீக்கத்தாலும் ரஸ்சிங் போரால் உயர்ந்து வரும் உலக சந்தையின் விலையேற்றத்தாலும் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 57% ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து, "பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சவாலான காலங்களில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது" என்று பிளிங்கன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Published by:Ilakkiya GP
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.